'மகிந்த தோல்வியை ஏற்றபோதும், கோத்தபாய அதிர்ச்சியில் உறைந்தார்'

Share it:
ad
கொழும்பு நகரில் இராணுவத்தை நிலைநிறுத்த இறுதி நேரத்தில் மகிந்த ராஜபக்ச முயற்சி மேற்கொண்டதாகவும், ஆனால், அவரது உத்தரவுக்கு இராணுவத் தளபதி இணங்க மறுத்து விட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய, நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியெ ரத்தன தேர்ர் ஆகியோருடன் இணைந்து, நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

கொழும்பில், இராணுவத்தினரை நிறுத்த வழங்கப்பட்ட உத்தரவை ஏற்க, இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்க மறுத்து விட்டார்.

அவசரகாலச்சட்டத்தின் மூலம், அதிகாரத்தை தக்க வைக்கும் திட்டத்தை முன்னைய அரசாங்கம் கொண்டிருந்தது.

கடைசி நேரத்தில், உயர்மட்டத்தில், இருந்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை ஏற்க மறுத்ததன் மூலம், அரசாங்க அதிகாரிகள் அந்த திட்டத்தை தோற்கடித்து விட்டனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜாதிக ஹெல உறுமயவின் அதுரலிய ரத்ன தேரர், இராணுவத்தின் உதவியுடன் ஆட்சியில் தொடர்ந்து நீடிக்க ராஜபக்ச குடும்பம் முயற்சித்தது என்று கூறியிருக்கிறார்.

மேலும் மகிந்த ராஜபக்ச தோல்வியை ஏற்றுக் கொண்ட போதும் அவரது சகோதரர் கோத்தபாய ராஜபக்சவினால் இதை தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு அதிர்ச்சியில் உறைந்து போனவராக இருந்ததாகவும் ஜாதிக ஹெல உறுமயவினர் கூறுகின்றனர். கோத்தபாய ராஜபக்சதான், ஆட்சியில் மகிந்த ராஜபக்ச தொடர்ந்து நீடிப்பதற்கு பல வழிகளையும் கையாண்டதாகவும் கூறுகின்றனர்.
Share it:

Post A Comment:

0 comments: