பொதுபல சேனா இல்லாமலிருந்தால், மஹிந்தவின் வெற்றி உறுதி செய்யப்பட்டிருக்கும் - பஸீர் சேகுதாவூத்

Share it:
ad
தற்போது ஏற்பட்டிருக்கும் அரசியல் மாற்றம் ஏமாற்றமாக அமைந்துவிடக்கூடாது என முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான பஸீர் சேகுதாவூத் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அரபுவசந்தம் எவ்வாறு  தலைமைத்துவமற்ற நிலையில், தற்காலிக வெற்றியை பெற்றுக்கொடுத்ததோ, அதேபோன்று இம்முறை முஸ்லிம்கள் தலைமையற்ற நிலையில், தாங்களாகவே முடிவெடுத்து ஆட்சியாளரின் மாற்றத்திற்கு வழியமைத்துள்ளனர். எனினும் இலங்கை முஸ்லிம்களுக்கு தலைமைத்துவம் ஒன்று அவசியமாகிறது. அது இன்றியமையாததுமாகும்.

இந்த ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்களின் பலம் மீண்டுமொருதடவை நிரூபிக்கப்பட்டுள்ளது. பௌத்தசிங்களவர்கள் அதிகமாக வாழும் பிரதேசங்களில் மஹிந்த ராஜபக்ஸ வெற்றியீட்டியுள்ளார். சிறுபான்மையின சமூகங்கள் அதிகமாக வாழும் பிரதேசங்களில் மைத்தி வென்றுள்ளார்.

தேர்தலுக்கு முன்னர் நான் மஹிந்த ராஜபக்ஸவு, மீண்டும் ஜனாதிபதியாக வேண்டுமென வாழ்த்துக்கூறி அனுப்பி கடிதமானது முற்றிலும் என்னுடைய தனிப்பட்ட விடயமாகும். இருந்தபோதும் கட்சியின் தீர்மானத்திற்கு கட்டுப்ட்டே செயற்பட்டேன்.

பொதுபல சேனா என்றதொரு அமைப்பு இல்லாமலிருந்திருந்தால், மஹிந்த ராஜபக்ஸவின் வெற்றி மீண்டுமொருதடவை உறுதி செய்யப்படிட்டிருக்குமென்பதே தனது அபிப்பிராயம் எனவும் பஸீர் சேகுதாவூத் மேலும் குறிப்பிட்டார்.

Share it:

Post A Comment:

0 comments: