மகிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இடம்பெற்ற ஊழல், மோசடிகளை தேடியறிய விசேட பொறிமுறையொன்றை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அதற்காக தனியான குழுவொன்றை அமைக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்திருப்பதாகவும் பிரதி நீதியமைச்சர் சுஜீவ சேரசிங்க தெரிவித்தார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் சந்திப்பின் போதே இத் தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக பிரதியமைச்சர் சுஜீவ சேரசிங்க தெரிவித்தார்.
அரசின் 100 நாள் வேலைத் திட்டத்தின் பிரதான அம்சமாக அடுத்த ஒருவாரகாலத்துக்குள் ஊழல், மோசடிகள் தொடர்பான முழு அளவிலான அறிக்கையொன்றைத் தயாரிப்பதற்காக விசேட குழுவை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், ஊழல், மோசடிகளை தேடியறிந்து உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு விசேட பொறிமுறையொன்றை அறிமுகப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது இலஞ்சம், ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்குப் புறம்பானதாக செயற்படும். 100 நாள் வேலைத் திட்டத்தில் அடுத்துவரும் நாட்கள் எமக்கு முக்கியமானவையாக அமையும். ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்த 100 நாள் வேலைத் திட்டத்தை வெற்றி கொள்ளத் திட்டமிட்டுச் செயற்பட்டுவருகின்றோம்.


.jpg)
Post A Comment:
0 comments: