நமோ நமோ மாத்தா, நம் சிறிலங்கா...!

Share it:
ad

-Rauf Hazeer-

10--1-2015 ரவூப் ஹகீம் அவர்களுடன் மு.கா பாராளுமன்ற , மாகாணசபை உறுப்பினர்கள், நெருங்கிய நண்பர்கள் பேசிக் கொண்டிருந்தபோது அங்கிருந்த ஒருவர் " இந்தவெற்றி TNA யும் SLMC யும் கொண்டுவந்ததல்ல , இது சிங்கள பெரும்பான்மை வாக்காளர்களினால் விளைந்தது என்று சம்பிக்க ரணவக்க சொல்கிறார் , இதனை நீங்கள் கண்டிக்க வேண்டும் " என்றார் .

அப்போது புன்முறுவலுடன் ஹகீம் இவ்வாறு சொன்னார் :

" சம்பிக்க சொன்னதில் எந்தத் தவறுமே இல்லை .இந்த வெற்றிக்கு நாம் வெளிப்படையாக உரிமை கொண்டாடக் கூடாது .ஹெல உறுமயவின் பங்கு இவ் வெற்றியில் பாரிய செல்வாக்கு செலுத்தி உள்ளதை மறைக்க முடியாது , மகிந்த அரசின் ஊழல்கள் , அதிகார துஸ்பிரயோகம் போன்றவற்றை மற்ற எவர் சொன்னாலும் சிங்கள மக்கள் கணக்கில் எடுத்திருக்க மாட்டார்கள் . அந்த மக்களுக்குள் செல்வாக்குள்ள அவர்களின் ஒரு முக்கிய அரசியல் கட்சியான ஹெல உறுமய அதனைச் சொன்னதனால் மட்டுமே உண்மையை உண்மை என்று விளங்கி மஹிந்தைக்கு எதிராக வாக்களித்திருக்கிறார்கள் . சிறுபான்மை மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் போல 70% -80 % மைத்திரீக்கு வாக்களிக்காது விட்டாலும் , சிங்கள பெரும்பான்மை கொண்ட மஹிந்த வெற்றிபெற்ற தொகுதிகளில் மஹிந்தைக்கும் , மைத்திரீக்கும் இடையிலான வாக்கு வித்தியாசத்தின் இடைவெளியை ஐ தே கா , ஹெல உறுமய , ஜே வீ பீ போன்ற கட்சிகள் கணிசமான அளவு குறைத்திருக்காவிடின் வெற்றி கை மாறிப் போய் இருக்கும் ."

ஹகீம் இன்னுமொரு விடயத்தையும் இறுக்கமாக குறிப்பிட்டார்

."ஒரு மோசமான இனவாதச் சூழலில் நாம் சிக்கிக் கொண்டிருக்கிறோம் . எரிகிற நெருப்பில் , எண்ணெய் வார்க்கிற வார்த்தைப் பிரயோகங்களில் இருந்து நம் வாய்களை கட்டி வைத்தாக வேண்டும் . நம்மால் தான் "யுத்த வெற்றியின் முடிசூடா மன்னன்" மண் கவ்வினான் என்று பெரும்பான்மை இனத்தவர்க்கு நினைக்க இடங் கொடுப்பது நம்மீது அவர்களுக்கு வெறுப்பை வளர்த்து , பழிவாங்கும் உணர்வை அவர்களிடம் விதைத்துவிடும் .ஹெல உறுமய போன்றவர்களுடன் நாம் புரிந்துணர்வை வளர்த்துக் கொள்வதுதான் இனவாதம் தலை தூக்காமல் தடுப்பதற்கான சரியான வழியாகும் , பாருங்கள் , நமது கரையோர மாவட்ட கோரிக்கையை மஹிந்தவின் அணியினர் இனவாதமாக்கி சிங்களவர்களின் வாக்குகளை சூறையாட எத்தனித்தபோது சம்பிகவும் , ரத்தன தேரருந்தான் அதனை சிங்கள மக்களுக்கு விளக்கி எமது கோரிக்கையை நியாயப் படுத்தினார்கள் .அந்தப் புரிந்துணர்வை மூலதனமாகக் கொண்டு நாம் கரையோர அரச அதிபரை பெற்றுக்கொள்ள முயலவேண்டுமே தவிர , மீண்டும் அவர்களை எதிரிகளின் பாசறைக்குள் தள்ளிவிடக் கூடாது ."

மேலும் கூறுகையில் -

"எதிர் காலம் நாம் மிகவும் சாணக்கியமாக நடந்துகொண்டு புரிந்துணர்வை வலுப்படித்திக் கொள்ள வேண்டிய காலமாகும் .இந்த வெற்றியில் அளவுக்கு மிஞ்சிய உரிமை கொண்டாடுவதை தவிர்த்துக்கொண்டு அதற்க்காக நாம் 
பொறுமையுடன் முன்னேரவேண்டுமே தவிர , சில்லறை விசயங்களுக்காக சிண்டு முடிந்து கொண்டு சண்டைக்கு போகக்கூடாது " என்றும் சொன்னார் .

ஆம் -
இது 
நாட்டின் வெற்றி ,
இது 
நமது வெற்றி .
நாம் என்பது 
நாம் தான் .
அது 
சிங்கள , தமிழ் 
முஸ்லிம் , பெர்கர் ,மலே .......
என்கிற இனங்களைக் கடந்தது , 
இலங்கையன் என்கிற 
இரத்தத்தில் இணைந்தது .
வாருங்கள் !
பாற்சோறு சமைத்து 
பனம் பாணி ஊற்றி 
பாயில் அமர்ந்து 
சஹனில் சாப்பிடுவோம் !
நமோ நமோ தாயே 
நம் ஸ்ரீ லங்கா

Share it:

Post A Comment:

0 comments: