''தேர்தலில் வெற்றி பெற்றவுடனேயே...''

Share it:
ad

தாம் தேர்தலில் வெற்றி பெற்றவுடனேயே அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்கவுள்ளதாக பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

செய்தித்தாள் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போது இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

எரிபொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரிகளை நீக்குவதன் மூலம் இந்தப்பொருட்களுக்கான விலைகளை மேலும் குறைக்க முடியும் என்று மைத்திரிபால குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருட்களுக்கு வரிகளை விதிப்பதன் மூலம் வருடம் ஒன்றுக்கு அரசாங்கம் 40 ஆயிரம் மில்லியன் ரூபாய்களை வருமானமாக பெறுகிறது. எனினும் இந்த பணம் எங்கே செல்கிறது என்று மைத்திரிபால கேள்வி எழுப்பியுள்ளார். இந்த பணம் கட்சி அரசியலுக்கு பயன்படுத்தப்படுவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்

Share it:

Post A Comment:

0 comments: