சஜித் பிரேமதாஸாவின் சிறந்த முன்மாதிரி

Share it:
ad
அமைச்சர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தைப் பெற்றுக்கொள்ளப் போவதில்லை என வீடமைப்பு மற்றும் சமூர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்ல செத்சிறிபாயவில் அமைந்துள்ள வீடமைப்பு அமைச்சில் இன்று கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எனக்கு வழங்கப்பட்டுள்ள மூன்று உத்தியோகபூர்வ வாகனங்களையும் மீளவும் அமைச்சிடமே ஒப்படைப்பேன். அமைச்சர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தையோ அல்லது எரிபொருள் கொடுப்பனவுகளையோ பயன்படுத்தப் போவதில்லை.

அமைச்சர் என்ற ரீதியில் கிடைக்கப்பெறும் சகல சம்பளங்கள் கொடுப்பனவுகள் அனைத்தையுமே தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் கணக்கில் வைப்புச் செய்வேன். அமைச்சின் எந்தவொரு அதிகாரியும் உத்தியோகத்தகரும் கடமை நேரத்தில் மதுபானம் அருந்தவோ அல்லது புகைப்பிடிக்கவோ கூடாது.

அவ்வாறான பொருட்களை எடுத்துக் கொண்டு என்னிடம் வர வேண்டாம் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொள்ளும் நிகழ்வை பார்வையிட பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வருகை தந்திருந்த காரணத்தினால் அமைச்சிற்குள் சனநெரிசல் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Share it:

Post A Comment:

0 comments: