நாட்டில் ஜனநாயகம் நிலைநாட்டப்படும் என எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு வாக்குறுதி அளித்துள்ளார்.
கொழும்பு ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தமது தேர்தல் விஞ்ஞாபனத்தின் பிரதிகள் ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிறுவனங்களுக்கும் கொழும்பை மையமாகக் கொண்டு இயங்கி வரும் தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 8ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தாம் வெற்றியீட்டினால், ஜனநாயகத்தை நிலைநாட்டத் தேவையான சகல நிறுவனங்களையும் பலப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.
18ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்து, சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றச் சேவை, காவல்துறை திணைக்களம், தேர்தல் செயலகம், கணக்காய்வாளர் நாயக திணைக்களம் உள்ளிட்ட நிறுவனங்களின் சுயாதீனத்தன்மை உறுதி செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஊடக சுதந்திரத்தை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
அரச ஊடகங்களை ஆளும் கட்சி பிரச்சார நோக்கத்திற்காக பயன்படுத்திக்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு சர்வதேச அரங்கில் நன்மதிப்பு காணப்பட்டதாகவும், எனினும் துரதிஸ்டவசமாக உலக நாடுகள் இலங்கை மீதான நம்பிக்கையை இழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலக அரங்கில் இலங்கை தனிமைப்படுத்தப்படக்கூடிய அபாயத்தை எதிர்நோக்கி வருவதாகவும் அதற்கு தற்போதைய அரசாங்கமே காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமையை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
Gtn



Post A Comment:
0 comments: