போதைபொருள் வர்த்தகத்தின் 'கோட் பாதர்' ஆக பாராளுமன்ற உறுப்பினர்

Share it:
ad
இலங்கையின் போதைப் பொருள் கடத்தல்களுடன் தொடர்புடைய முக்கிய அரசியல்வாதி பற்றிய தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அண்மையில் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட வெலே சுதா என்ற பாரிய போதைப் பொருள் வர்த்தகரிடம் நடத்திய விசாரணைகளின் போது இந்த விடயங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

கடந்த அரசாங்கத்தின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே இவ்வாறு போதைப் பொருள் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஹெரோயின் போதைப் பொருள் வர்த்தகத்தின் கோட் பாதராக இந்த நாடாளுமன்ற உறுப்பினர் கருதப்படுகின்றார்.

கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த இந்த இளம் அரசியல்வாதி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சில போதைப் பொருள் கடத்தல்காரர்களிடம் இந்த அரசியல்வாதி மாதாந்தம் ஒரு கோடி ரூபா வரையில் கப்பமாக பெற்றுக்கொண்டுள்ளார்.

போதைப் பொருள் கடத்தல்காரர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு இந்த அரசியல்வாதியே தீர்வுகளை வழங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தனது மனைவி குறித்த அரசியல்வாதிக்கு பணத்தை வழங்கியதாக வெலே சுதா தெரிவித்துள்ளார்.

இந்த அரசியல்வாதி கடந்த அரசாங்கத்தில் பாதுகாப்பு அமைச்சின் முக்கிய பதவி ஒன்றையும் வகித்து வந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த அரசியல்வாதியின் தலைமையில் சில பாதாள உலகக் குழுக்களும் செயற்பட்டு வந்துள்ளன.

மக்கள் சேவைக்காக பயன்படுத்திய பணம் ஹெரோயின் வர்த்தகத்தின் மூலம் கிடைக்கப்பெற்றது என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

வெலே சுதா பல்வேறு நபர்கள் நிறுவனங்கள் பற்றிய தகவல்களை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த தகவல் பற்றி ஆராய்ந்து சாட்சியங்களை திரட்டி அதன் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

சில பொலிஸ் சிரேஸ்ட அதிகாரிகளும் வெலே சுதாவுடன் இணைந்து செயற்பட்டுள்ளனர்.
Share it:

WadapulaNews

No Related Post Found

Post A Comment:

0 comments:

Also Read

வடக்கில் தமிழர் முதலமைச்சராக இருக்கும்போது, கிழக்கில் முஸ்லிம் முதலமைச்சராக இருப்பதே நியாயம்

(ஏ.பி.எம்.அஸ்ஹர்)வடக்கு, கிழக்கைப் பொருத்த வரையில் வடக்கு மாகாணத்தில் ஒரு தமிழர் முதலமைச்சர் பதவியில் இருக்கும் போது கிழ

WadapulaNews