இலங்கையின் புதிய அரசாங்கத்தினது 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் உறுதியளிக்கப்பட்ட தேசிய ஆலோசனை குழு இன்னும் அமைக்கப்படவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் ஜனவரி 12ஆம் திகதி தேசிய ஆலோசனை குழு அமைக்கப்படல் வேண்டும்.
எனினும் குறித்த குழு அமைக்கப்படாமைக்கான காரணம் தெரியவரவில்லை என்று கொழும்பின் ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
புதிய அமைச்சரவை அமைக்கப்பட்ட பின்னர் இந்தக்குழு அமைக்கப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஏற்கனவே அமைச்சரவை அமைப்பும் முன்கூட்டியே கூறியப்படி அல்லாமல் ஒருநாள் தாமதமாகியே இடம்பெற்றது. அதற்காக காரணமும் கூறப்பட்டது.
எனினும் தேசிய ஆலோசனைக்குழு இன்னும் அமைக்கப்படாமைக்கான காரணம் குறித்து இன்னும் புதிய அரசாங்கம் காரணம் எதனையும் வெளியிடவில்லை.
இதேவேளை புதிய அமைச்சரவையில் அங்கம் வகிக்காத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஜே.வி.பி.யும் தேசிய ஆலோசனை குழுவில் அங்கம் பெற விருப்பம் வெளியிட்டுள்ளன.



Post A Comment:
0 comments: