ராஜபக்ஸ குடும்பத்திற்கு எதிராக முறைப்பாடு செய்ததால், மேர்வினுக்கு எதிரான விசாரணையை நிறுத்தக்கூடாது

Share it:
ad
மஹிந்தர ராஜபக்ஸ குடும்பத்திற்கு எதிராக முறைப்பாடு செய்ததன் காரணமாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு எதிரான விசாரணைகளை நிறுத்தக்கூடாது என ஜே.வி.பி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.

மேர்வின் சில்வா நேற்றைய தினம் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ மற்றும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ ஆகியோருக்கு எதிராக முறைப்பாடு செய்திருந்தார்.

கொலைச் சம்பவங்கள் வெள்ளைவான் கடத்தல்களுடன் கோதபாய ராஜபக்ஸவிற்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தியிருந்தார். பசில் ராஜபக்ஸ பாரிய ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து கிரமமான அடிப்படையில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார். உரிய விசாரணைகளின்றி மேர்வின் சில்வாவின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். மேர்வின் சில்வாவின் குற்றச் செயல்கள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
Share it:

Post A Comment:

0 comments: