ஜோர்தான் நாட்டில் தொழில் புரிந்து வந்த இரண்டு இலங்கைத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஜோர்தானில் நிலவும் கடும் குளிருடன் கூடிய காலநிலையில் இருந்து தம்மை தற்காத்து கொள்ள மேற்கொண்ட முயற்சி காரணமாக இந்த மரணங்கள் சம்பவித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளார்.
குருணாகல் பிரதேசத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்களே இவ்வாறு உயரிழந்துள்ளனர் எனவும் அவர்களின் சடலங்களை இலங்கைக்கு துரிதமாக எடுத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.


.jpg)
Post A Comment:
0 comments: