பாராளுமன்றம் 21 ஆம் திகதி கூடுகிறது - 29ம் திகதி இடைக்கால வரவு செலவுத் திட்டம்

Share it:
ad

புதிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவுத் திட்டம் அடுத்த மாதம் 29ம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின தேர்தல் பிரசார கூட்டங்களின் போது, மக்களுக்கு வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட மக்களுக்கான வரி நிவாரணம் உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கி இந்த இடைக்கால வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 100 நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ், அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்தல் உள்ளிட்ட பல நடவடிக்கைகளும், இந்த வரவு செலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்படும்.

அரசாங்கத் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, புதிய வருடத்தின் முதலாவது நாடாளுமன்றக் கூட்டம் எதிர்வரும் 21ம் திகதி இடம்பெறும் என்று நாடாளுமன்ற செயலாளர் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.
Share it:

Post A Comment:

0 comments: