லண்டனின் தெற்குப்பகுதியில் உள்ள டல்விச்சில் 1903 ஆம் ஆண்டு பிறந்தவர் க்ளாடிஸ் ஹூப்பர். 1977 ஆம் ஆண்டு இவரது கணவர் இறந்ததைத் தொடர்ந்து இங்கிலாந்தின் ஐலே ஆப் விட் தீவுக்கு இடம்பெயர்ந்தார். இளம் வயதில் சிறந்த பியோனோ இசைக்கலைஞராக விளங்கிய இவர், நேற்று தனது 112 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினார்.
தனது ஆரோக்கியத்தின் ரகசியம் பற்றிச் சொல்லும் ஹூப்பர், “வேலையின்றி சும்மா இருப்பதைவிட எப்போதும் ஏதாவது வேலை செய்து கொண்டிருப்பதையே நான் விரும்புகிறேன். நான் ஒரு நேர்க்கோட்டில் வாழ்பவள். முட்டாள்தனமான காரியங்கள் எதையும் செய்வதில்லை. இதுதான் உங்களை என்றும் இளமையோடு வைத்திருக்கும் என்று நினைக்கிறேன்” என்கிறார்.
மேலும் “நான் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறேனோ அதை மட்டுமே செய்கிறேன். என்னால் முடிந்த அளவுக்கு மற்றவர்களுக்கு உதவுகிறேன்” என்று கூறும் இந்தப் பாட்டி, “நான் என்னை வயதானவளாக உணருவதில்லை. உண்மையில் 70 வயதில் எப்படி இருந்தேனோ இப்போதும் அப்படியே இருக்கிறேன். எனக்குள் எந்த வித்தியாசமும் இல்லை” என்று கம்பீரமாகக் கூறுகிறார்.



Post A Comment:
0 comments: