தேர்தல் சட்டங்களை மீறுகின்றவர்கள் தொடர்பாக பதிவு செய்வதற்காக கறுப்பு புத்தகம்

Share it:
ad
தேர்தல் சட்டங்களை மீறுகின்றவர்கள் தொடர்பாக பதிவு செய்வதற்காக பொது எதிரணி கறுப்பு புத்தகம் ஒன்றை திறக்க தயாராகியுள்ளது.

கொழும்பில் இன்று 11-10-2014  இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய பொது எதிரணியின் ஜனாதிபதி ஊடக பேச்சாளர் மங்கல சமரவீர இதனை குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் சட்டங்களை மீறுகின்ற அரச நிறுவன தலைவர்கள் மற்றும் அதிகாரிகளின் தகவல்கள் இதில் உள்ளடக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

17 வது அரசியலமைப்பு இல்லாத நிலையில் தேர்தல் ஆiணாயருக்கு பெயரளவில் மாத்திரம் அதிகாரம் உள்ள நிலையில், உரிய பிரதிபலனை எதிர்பார்க்க முடியாது.

எனவே தான் கறுப்பு புத்தகத்தில் பதிவுகளை மேற்கொள்ள உரிய தகவல்களை தாம் கோருவதாக மங்கல குறிப்பிட்டார். தேர்தல் சட்ட திட்டங்களை மீறும் அதிகாரிகள் தொடர்பில் தகவல்கள் திரட்டப்படுகின்றன.

அவர்கள் தொடர்பில் நீதியின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மங்கல சமரவீர தெரிவித்துள்ளார்.
Share it:

Post A Comment:

0 comments: