நான் ஜனாதிபதியானால் படை சேனாதிபதியாகவும், ஜனாதிபதியாகவும் கடமையாற்ற விரும்புகிறேன்

Share it:
ad
-gtn-

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பிலான விடயங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப் படவில்லை என எதிர்க்கட்சியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்றைய 10-12-2014 தினம் நடைபெற்ற ஊடகப் பிரதானிகளுடனான சந்திப்பில் அவர் இதனைக்குறிப்பிட்டுள்ளார்.

தமது பிரதான நோக்கமானது 100 நாட்களுக்குள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழித்து அவசரமாக அரசியல் சாசன மாற்றங்கள் செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்ற தேர்தலில் வெற்றியீட்டும் புதிய அரசாங்கம் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் நடவடிக்கைகளை எடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

தமது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் ஒர் கட்டமாக வடக்கில் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜாதிக ஹெல உறுமய மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகியவற்றுடன் உடன்படிக்கைகள் கைச்சாத்திடப் பட்டுள்ளதாகவும் வேறும் தரப்புக்களுடன் உடன்படிக்கை கைச்சாத்திடும் திட்டம் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமது தேர்தல் கொள்கைப் பிரகடனம் அடுத்த வாரமளவில் வெளியிடப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தகவல் அறிந்து கொள்ளும் உரிமை மற்றும் ஊடக சுதந்திரம் ஆகியன தொடர்பிலான விடயங்கள் உள்ளடக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டினால், நிறைவேற்று அதிகாரம் இல்லாதொழிக்கப்படும் என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

எனினும், தொடாந்தும் பாதுகாப்புப் படையியனரின் சேனாதிபதியாகவும் ஜனாதிபதியாகவும் கடமையாற்ற விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
Share it:

Post A Comment:

0 comments: