மைத்திரிபால சிறிசேன விலக்கப்பட்டார்

Share it:
ad
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளராக செயற்பட்ட முன்னாள் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன மற்றும் அவருக்கு ஆதரவு வழங்கிய 6 பேரது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உறுப்புரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது.

நேற்று கூடிய ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அகில இலங்கை மத்திய செயற்கு கூட்டத்தின் போது ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டதாக கட்சியின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, முன்னாள் அமைச்சர்களான மைத்திரிபால சிறிசேன, ராஜித்த சேனாரத்ன, நவீன் திசாநாயக்க, துமிந்த திசாநாயக்க ஆகியோரது கட்சி உறுப்புரிமையே இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர, முன்னாள் பிரதியமைச்சரான எம்.கே.டீ.எஸ் குணவர்த்தனவின் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உறுப்புரிமையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Share it:

Post A Comment:

0 comments: