(றிப்கான் கே சமான்)
மன்னார் மாவட்டத்தின்,முசலிப்பிரதேச சமூகம் ஒன்னிணைந்து சிறுபான்ம சமூகத்தின் விடிவிட்கான பயணத்தில் இணைந்துள்ள வன்னிமாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக் அவர்களை வரவேற்கும் மாபெரும் விழா நேற்று மாலை சிலாவத்துறையில் இடம்பெற்றது.
இதன்போது அ.இ.ம.க வின் முசலி பிரதேச சபை வேற்பாளர் றஸ்மி அப்துல் ரஸீத் கட்சியிலிருந்து விலகி ஜனாதிபதி பொது வேற்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதற்காக ஹுனைஸ் பாரூக் அவர்களுடன் இணைந்து கொண்டார்.
வன்னியின் விடிவெள்ளி சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக் அவர்களை வரவேற்கும் இம்மாபெரும் வரவேற்பு வைபவத்தில் மேல்மாகாண சபை உறுப்பினர்களான கௌரவ அசாத் சாலி, கௌரவ முஜிபுர் ரஹ்மான், கெளரவ பைரூஸ் ஹாஜியார், வடமாகாணசபை உறுப்பினர் கௌரவ அஸ்மி அய்யுப், மற்றும் வடமாகாண சபை வேற்பாளர் முனாஜித் சீலானி, வன்னிமாவட்ட ஐ.தே.க அமைப்பாளர்கள் உற்பட பல பிரமுகர்களும், பல்லாயிரக் கணக்கான ஆதரவாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.




Post A Comment:
0 comments: