நியாயமான, சுதந்திரமான தேர்தல் நடைபெற்றால், மஹிந்த தோல்வியை தழுவுவார் - அநுரகுமார திஸாநாயக்க

Share it:
ad
Tamil translation of MP Anura Kumara Disanayake’s TV recent interview 

ஊடகவியலாளர்: மக்கள் விடுதலை முன்னணி தான் இந்த ஜனாதிபதி தேர்தலின் தீர்மானிக்கும் சக்தியென்றால், உங்களால் இந்த ஜனாதிபதி தேர்தல் சம்பந்தமான எதிர்கூர்வை செய்ய முடியுமா?  யார் வெற்றி பெறுவார்கள்?  

அநுர குமார திஸாநாயக்க : சரியாக கணக்கு போட்டு பார்த்தால் ராஜபக்ஸ அவர்கள் தோல்வியுறுவார். அவரது தோல்வி அவரது நடவடிக்கைகளிலேயே வெளியாக தொடங்கிவிட்டது. இந்த காரியானுகூலமான நேரத்தில் அவசரமாக இந்தியாவுக்கு  செல்ல வேண்டுமா திருப்பதி யில் பூஜை செய்வதற்காக?

வேட்பு மனு தாக்கல் செய்யவும் சாத்திரக்காரன் சொல்வது போலத்தான் செய்ய வேண்டுமா? என்ன நடந்திருக்கின்றது இந்த நாட்டுக்கு? அதுபோல அவர் வெளியிடும் சில கருத்துக்களை பாருங்கள். "என்னிடம் பைல்கள் இருக்கின்றது" என்று சமீபத்தில் ஒரு கருத்தை வெளியிட்டார். அவை உள் அச்சத்தினால் வரும் கருத்துக்கள். 

இந்த ஜனாதிபதி முறையை இல்லாதொழிக்கும் அதிகாரம் எனக்கில்லை, பாராளுமன்றத்திடம் தான் இருக்கின்றது, பாராளுமன்றம் அதை செய்யவில்லை என்றார். உண்மை! நாங்கள் படித்த படிப்பின் படி பாராளுமன்றத்துக்குத்தான் அந்த அரசியல் யாப்பை மாற்றும் அதிகாரம் உள்ளது.

ஆனால் புத்தகத்திலுள்ள பாராளுமன்றமல்ல தற்போது நாட்டிலுள்ளது. புத்தகத்தில் உள்ள பாராளுமன்றத்துக்கு அரசியல் யாப்புகளை திருத்தும் அதிகாரம், நாட்டின் சட்டமியற்றும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அது புத்தகத்தில், நாம் படித்த சமூக கல்வி புத்தகத்தில் அப்படித்தான் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் தற்போது நாட்டில் உள்ள பாராளுமன்றம் அப்படியானது அல்ல. இது ஜனாதிபதியால் முழுமையாக விழுங்கப்பட்ட ஒரு பாராளுமன்றம். 

நிமல் சிறிபால சில்வா அவர்கள் நாட்டில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழிக்கும் ஒரு பிரேரணைய பாராளுமன்றத்துக்கு கொண்டுவருவதாக வைத்துக்கொள்வோமே... இல்லாதொழிந்து போவது நிறைவேற்று அதிகார  ஜனாதிபதி முறை அல்ல நிமால் சிறிபால சில்வா அவர்கள்.  அப்படித்தான் நடக்கின்றது. 

அதனால் ஜனாதிபதி சொல்வது போல் அது நான் அல்ல பாராளுமன்றம் என்பதெல்லாம் பொய்க்கதைகள். சமீபத்தில் நாம் பார்த்தோம் ஜனாதிபதி கூறியிருந்தார் இந்த டீ என் ஏ மற்றும் தமிழ் புலம்பெயர் மக்களும் ஈழ கோரிக்கையை கைவிட்டால் தான் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை கைவிடுவதாக. இப்போது பாருங்கள் தமிழ் கூட்டமைப்பு ஈழ கோரிக்கையை கைவிடுவதாக கூறியுள்ளது. நீதிமன்றத்துக்கு அவர்கள் அவ்வாறு உறுதியளித்துள்ளார்கள். 

ஆனால், இந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை எப்போது இல்லாதொழிப்பதாக சொன்னார்? யுத்தமொன்று நடந்து கொண்டிருக்கும் போது பிரபாகரனும் உயிருடன் இருந்தபோதுதான் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதாக சொன்னார். இப்போது யுத்தமும் நிறைவுற்று, பிரபாகரனும் முடிவுக்கு வந்தும் ஐந்து ஆண்டுகள் கடந்தும் சொல்கிறார்கள்....

"ஈழம் ஒன்று உருவாகப்போகின்றது" அதாவது எங்கேயோ ஒரு நாட்டில் சுரேன் சுரேந்திரன் என்று ஒருவர் இருக்கின்றாராம். அவருக்கு ஈழம் பற்றிய ஒரு கருத்து இருக்கின்றது, அவர்கள் அதை கை விட்டால் நாங்கள் இதை கைவிடுவோம் என்கின்றார். என்ன பொய் கதைகள் இவைகளெல்லாம்?? வைக்கோல் தூக்கில் (இத்துப்போன கயிற்றில்) தொங்குவதை தான் இவை காட்டுகின்றது! 

அதுபோல இன்னொரு கருத்தையும் முன் வைத்து வருகின்றார்கள், இந்த அரசை எதிரணி வென்றாலும் தாங்கள் கைவிடுவதில்லை என்று! அப்படியும் சொல்கின்றார்கள். தோற்றாலும் போக மாட்டார்கள் என்ற கருத்தை முன் வைத்துவருகின்றார்கள். இப்படித்தான் தோற்கப்போகும் ஒருவர் கதைகளை கட்டி விடுவார்...தோல்வியை சந்திக்க போகின்றவர் சமூகத்தில் இப்படி ஒரு கதையை கட்டி விடுவார். தோற்றாலும் போகமாட்டோம் நாங்கள் என்று கூறுகின்றார்கள். இல்லை, தோற்றால் போகாமல் இருக்க முடியாது. 

யாராவது நினைக்கின்றார்கள் என்றால் இராணுவத்தை வைத்து பாதுகாப்பு செயலாளர் தலையிட்டு ஒரு இராணுவ அரசை ஏற்படுத்துவார் என்ற ஒரு கருத்தும் உலவ விடப்பட்டுள்ளது. இந்த நாட்டில் அதை செய்ய முடியாது. நாங்கள் உறுதியாக சொல்கின்றோம் தேர்தலில் தோற்றால் அடுத்தநாள் ராஜபக்ஷே பதவியை கைவிட வேண்டும், பதவியை துறக்க வேண்டி வரும். அப்படி பதவியை கைவிடவில்லையெனில் இந்நாட்டு மக்களுடன் நாங்கள் வீதிக்கு இறங்கி போராடுவோம். அதை நாங்கள் உறுதியாக கூறுகின்றோம். இது என்ன செய்யப்பார்க்கின்றார்கள் தெரியுமா? வேறு ஒன்றும் அல்ல, இது தோல்வியில் உள்ள பயம். அவர்கள் செயல் படும் விதமே போதுமானது அவர்களின் தோல்வி உறுதியாகிவிட்டது என்பதை சொல்ல. 

ஊடகவியலாளர்: அது ஏற்றுக்கொள்ள கூடிய அத்தாட்சிகள் இல்லை அல்லவா?

அநுர குமார திஸாநாயக்க : சொல்கின்றேன்.... நான் இன்று புள்ளி விபரங்களை கொண்டுவரவில்லை, ஆனால் நாங்கள் நினைக்கின்றோம் ஜனாதிபதி மஹிந்த ராஜபஷேக்கு 2010 இல் கிடைத்த அதி கூடிய செல்வாக்கு இருந்த வேளையில் எடுத்து பார்ப்போமேயானால், அவர் நகர்சார்ந்த (நாகரிகமான) சிங்கள பிரதேசங்களான மஹரகமை, ஹோமாகமை, கடுவலை போன்ற பிரதேசங்களில் நூற்றுக்கு 53 அல்லது 54 விகிதமான வாக்குகளையே பெற்றார். கிராமிய மட்டத்தில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக உள்ள மெதவச்சி, ஹொரவபொத்தானை, மெதிரிகிரிய, மொணராகலை போன்ற பகுதிகளில் அவர் நூற்றுக்கு 59 வீதமான வாக்குகளையே எடுத்தார். நாங்கள் மொத்த சிங்களவாக்குகளை எடுத்துப்பார்ப்போமே, எங்கள் நாட்டில் ஒருகோடியே ஐந்து இலசம் அளவு சிங்கள வாக்காளர்கள் உள்ளார்கள். அதில் அவர் 60 வீதமான வாக்குகளை ஜனாதிபதி எடுக்கின்றார் என்று வைத்துக்கொள்வோமே.... 60% எடுக்க முடியாது , என்றாலும் அவருக்கு சாதகமாகவே சிந்தித்து நூற்றுக்கு 60 விகிதம் எடுப்பார் என்று கற்பனை செய்தாலும், இஸ்லாமிய மக்களின் ஓட்டுக்கள் அவருக்குமுன்னர் கிடைத்த வீதாசாரத்திலும், மலையக தமிழ் மக்கள் அவருக்களித்த வாக்கு வீதாசாரத்தையும், வடக்கு தமிழ்  மக்கள் அவருக்குமுன்னர் அளித்த வாக்குகளையும் அப்படியே வைத்து பார்த்தாலும், ராஜபக்ஷே ஜனாதிபதிக்குள்ள வாக்குகள் நூற்றுக்கு நாற்பத்தேழு மட்டுமே! 

இதில் தீர்மானிக்கும் சக்தி எது என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்? 

அநுர குமார திஸாநாயக்க : தீர்மானிக்கும் சக்தி என்றால் இப்படித்தான்...... இந்த மக்கள் அந்த மக்கள் என்று நாங்கள் பிரித்து சொல்வது சரியல்ல, ( சற்று தயங்குகின்றார்... அவரது உடல் மொழியானது இம்முறை சிறுபான்மை வாக்குகளே தீர்மானிக்கும் சக்தி என்று சொல்லாமல் சொல்கிறது) வர்க்க ரீதியாக நாங்கள் பார்க்காமல் இந்த தேர்தல் பிரச்சார முறையை நான் தீர்மானிக்கும் சக்தியாக காண்கின்றேன். இலங்கை தேர்தல் வரலாற்றிலேயே அதிகம் பணம் செலவழிக்கப்படும் ஒரு தேர்தலாக நான் இதை காண்கின்றேன். மந்திரிமார்களை விலை கொடுத்து வாங்க செலவழிக்கும் தொகைகள், கடவுட்களை வைப்பதற்காக செலவழிக்கும் பணத்தின் அளவு, அரலியகஹ மாளிகையில் தானம் கொடுப்பதற்காக செலவிடும் தொகையை கணக்கிட்டு பார்த்தால், போஸ்டர்களை பாருங்கள் அவர்களே ஒட்டுகின்றார்கள், மீண்டும் அவர்களே கிழித்து அதில் மீண்டும் ஒட்டி பைத்தியம் விளையாடுகின்றார்கள். கடிகாரங்கள் கண்டேனர்கள் கணக்கில் கொண்டுவரப்பட்டுள்ளனவாம். சாரிகள் கண்டெயினர் கணக்கில் கொண்டுவர ஆயத்தங்களை செய்துள்ளார்கள், அவற்றால் மிக அதிகமான பணத்தை அள்ளி வீசும் ஒரு தேர்தலாக இது மாற்றம் பெற்றுள்ளது, அதுபோல இலங்கை வரலாற்றில் அதிகாம நீதிக்கு புறம்பான நிகழ்வுகள் நடக்கும் தேர்தலாக இது இருக்கும். 

இப்போதும் பாருங்கள் தேர்தல் ஆணையாளர் கூறியிருக்கின்றார், தேர்தல் திணைக்கள பகுதியில் உள்ள க்ட் அவுட் பதாதைகளையாவது நீக்கும் படி, அதாவது அவர் அப்பாதையால் செல்கையில் வெட்கமாக இருக்கும், நாட்டில் இருந்தால் பரவாயில்லை, அவர் பார்வைக்கு இருக்க கூடாதாம். என்ன சொல்கின்றார் அவர்?

மிகவும் அதிகமான கட் அவுட்களை கொண்ட தேர்தல் இதுவாகத்தான் இருக்கும். சட்டத்தை முறிக்கும் ஒரு தேர்தல் இது. பெரும் குழப்பங்கள் ஏற்படப்போகும் தேர்தலாக இது மாற்றமடைய உள்ளது. இந்த முறை சுதந்திரமானதும் நியாயமானதுமான ஒரு தேர்தலை நாங்கள் நடத்துவதற்கு முனைய வேண்டும். அவ்வாறு நியாயமானதும் சுதந்திரமானதுமான ஒரு தேர்தல் நடைபெறும் பட்சத்தில் ராஜப்க்ஷே தோல்வியையே தழுவுவார்.
Share it:

Post A Comment:

0 comments: