ஜனாதிபதி தேர்தலின் பொதுவேட்பாளர் மைத்ரிபால சிரிசேனா அவர்களை ஆதரித்து ஏறாவூர்,புன்னக்குடா வீதியில் இன்று மாலை கிழக்குமாகாணசபை பிரதித் தவிசாளரும்,முன்னாள் சுகாதார அமைச்சருமான அல்ஹாஜ் எம்.எஸ்.சுபைர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ,எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் கலந்துகொண்டார்கள்.
இந்நிகழ்வில் உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க,
மைத்திரிபால சிறிசேன அவர்கள் வெற்றி பெற்று புதிய ஆட்சி மலரும்போது, உங்கள் மகன் சுபைர் அவர்களை மாகாண அமைச்சு அல்ல,தேசிய அமைச்சராக்க முயற்சிப்பேன்.
நாட்டில் உண்மயான அபிவிருத்தி நடைபெறவில்லை.கப்பல்கள் வரமுடியாத துறைமுகமும், அந்நியச்செலாவணி பெறமுடியாத சுற்றுலாப்பயணிகளின் வருகையும்தான் அதிகரித்துக்காணப்படுகிறது.
தனது நலனுக்காக ஒரு சில குழுக்களை உருவாக்கி முஸ்லிம் சமூகத்துக்குப் பிரச்சினைகளை ஏற்படுத்தினார் மஹிந்த. பௌத்த தலைமைப்பீடங்கள் இந்த நாட்டிலே ஒரு மத முரண்பாட்டை ஏற்படுத்த வேண்டாமென்று மஹிந்தவை எச்சரித்தது. ஆனாலும் மஹிந்த அரசு அதனைத்தான் செய்தது.
புதுயுக எமது ஆட்சி மலரும்போது விகாரை, கோயில், பள்ளிவாசல்கள், தேவாலயங்களை நாம் பாதுகாப்போம். மத ஸ்தலங்களை சேதப்படுத்தியவர்களுக்கெதிராக நாம் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுப்போம்.
கிழக்குமாகாணத்திலும்,ஏனைய இடங்களிலும் பாரிய தொழில் பேட்டைகளை அமைத்து பத்து லெட்சம் இளைஞர் ,யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்குவேன், எதிர்வரும் எட்டாம் திகதி உங்கள் வாக்குகளை அன்னம் சின்னத்துக்கு அளித்து வெற்றி வாகை சூட உதவுங்கள் என்று கூறி முடித்தார்.





Post A Comment:
0 comments: