கொழும்பில் மைத்திரியை ஆதரித்து, முஸ்லிம்கள் ஏற்பாடு செய்துள்ள பகிரங்க கூட்டம்

Share it:
ad

பொது வேட்பாளர் மைத்திரிபால சிறினோவை ஆதரித்து முஸ்லிம்கள் சார்பில் மாபெரும் பொதுக் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாளை மறுதினம், வியாழக்கிழமை, 25 ஆம் திகதி, லேக் ஹவுஸிற்கு முன்னால் உள்ள, இல 12, ஏ.ஆர். விஜயவர்த்தன மாவத்தையில் அமைந்துள்ள கண்காட்சி கேட்போர் கூடத்தில் இந்த பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யபட்டுள்ளது.

இக்கூட்டத்தில் கொழும்பிலுள்ள முஸ்லிம்களும், நாட்டின் ஏனைய பகுதி முஸ்லிம்களும் பங்குகொள்ள் முடியுமென ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

கூட்டத்தில் மைத்திரிபால சிறிசேனா உரையாற்ற உள்ளதுடன், கரு ஜெயசூரியவின் சிறப்பு உரையும் நடைபெறவுள்ளது. 

கூட்டத்திற்கு ஜனாதிபதி சட்டத்தரணி சுஹைர் தலைமை தாங்கவுள்ளார்.
Share it:

Post A Comment:

0 comments: