விடியலை நோக்கிய தூது..!

Share it:
ad


எல்லாமே மாவுதான் 
இருப்பது பிட்டும் இடியாப்பமுமே 
சூழ் நிலைக்கு எது சிறந்தது பாருங்கள் 
எல்லாம் காரமும் அமிலமும்தான் 
தாக்கம் குறந்ததை சேருங்கள்   

இனவாதம் என்பது 
ஆற்றமுடியாத மன நோய்   
அகோரத்தை குறைக்கும் மருந்தை  தேடுங்கள் 

நமது இனத்தின் பாதை கடினமானதுதான் 
கற்கள் நிறைந்த பாதை இருக்க 
முள் நிறைந்த பாதை இலகுவானதா 
தலைவனுக்கு மரணம் என்பது தலைப்பாகை 
இதை ஏற்பவனே
தலைமைக்கு தகுதி 
  
அனைத்தையும் ஆட்சி புரிவது அல்லாஹ் 
ஏகத்துவதை ஏற்பின் 
உங்களின் அதிகாரமும் அவனின் நாட்டமே 

மரணத்தின் எல்லைக்கு சென்று 
சுவர்க்கத்திற்கும் நரகத்திற்கும் நடுவில் நின்று 
அமானிதத்தை நினவு கூருங்கள் 
உங்கள் தீர்ப்பை எழுதுங்கள் 

muhamed irfan      
Share it:

Post A Comment:

0 comments: