நிந்தவூரில் முஸ்லீம் காங்கிரஸ், ஆதரவாளர்கள் பட்டாசு கொளுத்தி கொண்டாட்டம் (படங்கள் இணைப்பு)

Share it:
ad

-மு.இ. உமர் அலி-

இன்று கொழும்பிலே நடைபெற்ற  ஊடகவியாளர்கள் மகாநாட்டில்  தமது கட்சி அரசிலிருந்து விலகி  எதிரணிகளின் பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவை  ஆதரிக்கும் என்று சிறீலங்கா முஸ்லீம் காங்கிரசின்  தலைவர் அறிவித்ததனைத்தொடர்ந்து  கிழக்கின்  முஸ்லீம்கள் பட்டாசு கொளுத்தி  தமது மகிழ்ச்சியைக்கொண்டாடினர்,

நிந்தவூர் பிரதேசத்தில் முஸ்லீம் காங்கிரசின் தீவிர ஆதரவாளர்கள்  பிரதான வீதியில் பல இடங்களில் பட்டாசு கொளுத்தி  மகிழ்ச்சியை வெளிக்காட்டினர்.
இந்த பட்டாசு வெடித்த ஒலிகளைக்கேட்ட மக்கள் பிரதான வீதியில் குவியத்துவங்கி ஆங்காங்கே குழுக்களாக நின்று   விமர்சனங்களில் ஈடுபட்டதை காணக்கிடைத்தது.

மக்கள் மகிழ்ச்சியை வெளிக்காட்டியபோதும், காலந்தாழ்த்தி  இந்த முடிவினை எடுத்தமைக்காக மக்கள் கட்சியின் தலைவரை  வார்த்தைகளால் நையப்புடைத்தது  செவிமடுக்கக் கூடியதாக இருந்தது. குறித்த சில  அணிகளைத்தவிர  ஒட்டுமொத்த வடக்கு,கிழக்கு மாகாணத்தின் வாக்குகளும்  கடந்த ஜனாதிபதித் தேர்தலைப்போன்று  எதிரணிகளின் பொது வேட்பாளருக்கே வழங்கப்பட இருப்பது  குறிப்பிடத்தக்கது.


Share it:

Post A Comment:

0 comments: