காத்தான்குடியில் மஹிந்த ராஜபக்ஷ, தமிழிலும் உரை (ஓடியோ + படங்கள்)

Share it:
ad
(பழுலுல்லாஹ் பர்ஹான்)

ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்து 20-12-2014 நேற்று வெள்ளிக்கிழமை மாலை காத்தான்குடியில் இடம்பெற்ற மாபெரும் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மட்டக்களப்பு தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முகவரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் ஏற்பாட்டில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இதன் போது ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிங்களத்திலும்,தமிழிலும் 18 நிமிடம் விஷேட உரை நிகழ்த்தினார்.

இங்கு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொன்னாடை போர்த்தப்பட்டு மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டார். கொட்டும் மழைக்கு மத்தியில் இடம்பெற்ற இம் மாபெரும் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பெரும் திரளான பொது மக்கள் கலந்து கொண்டனர்.






Share it:

Post A Comment:

0 comments: