ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் ஆராய்வதற்காக முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடம் நாளை மாலை மணிக்கு கூடவுள்ளதாக அக்கட்சியின் செயலாளர் ஹசன் அலி ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் கூறினார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
இன்று வெள்ளிக்கிழமை, முஸ்லிம் காங்கிரஸ் தனது உள்ளுராட்சி மன்ற முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடலில் பங்கேற்றது. இதன் அடுத்த கட்டமாக நாளை சனிக்கிழமை முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடம் கூடுகிறது. இதன்போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவளிக்கப்படும் என்ற தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றார்.


.jpg)
Post A Comment:
0 comments: