(Gtn)
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக தெரிவு செய்யப்படுவதில் எவ்வித எதிர்ப்பும் கிடையாது என ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பொது வேட்பாளராக போட்டியிடும் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவி வகிப்பதிலோ அல்லது பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவி வகிப்பதிலோ எதிர்ப்பு கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுக் கொண்டு தெரிவு செய்யப்படுவோர் பதவிகளுக்கு நியமிக்கப்படுவதில் எவ்வித முரண்பாடும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
யார் பிரதமராக பதவி வகிக்கின்றார் என்பது பற்றிய பிரச்சினை பெரிதல்ல எனவும் நாட்டின் அரசியல் சூழ்நிலை குறித்தே கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றின் பெரும்பான்மையின் அடிப்படையில் ரணில்விக்ரமசிங்கவோ அல்லது வேறும் ஒருவருக்கோ பிரதமர் பதவி வழங்கப்படுவதில் சிக்கல் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் எந்த வகையிலாவது அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள முயற்சிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.



Post A Comment:
0 comments: