மைத்திரி, ரணில் ஆகியோரிடம் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை

Share it:
ad
-Gtn-

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஆகியோர் புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்கு மூலம் அளித்துள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, காவல்துறை மா அதிபரிடம் செய்த முறைப்பாடு தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மைத்திரிபால சிறிசேனவுடன் தாம் இரகசிய உடன்படிக்கை செய்துகொண்ட சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சுமத்தியிருந்ததுடன் ஆவணமொன்றையும் வெளியிட்டிருந்தார்.

இந்த ஆவணமானது போலியாக தயாரிக்கப்பட்டது எனவும் இந்தக் கையொப்பங்கள் போலியானவை எனவும் மைத்திரிபாலவும், ரணில் விக்ரமசிங்கவும் தெரிவித்திருந்தனர்.

இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க காவல்துறை மா அதிபரிடம் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்த முறைப்பாடு தொடர்பில் காவல்துறை அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஆவணத்தின் மூலப் பிரதி தேடப்பட்டு வருவதாகவும் தம்மிடம் நகல் பிரதி ஒன்றே இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விசாரணைகள் எப்போது நிறைவுக்குக்கொண்டு வரப்படும் பற்றிய தகவல்களை காவல்துறை ஊடகப் பேச்சாளர் வெளியிடவில்லை.

இரகசிய ஒப்பந்தம் மேற்கொண்டு வடக்கிலிருந்து 50 வீத படையினர் அகற்றப்பட உள்ளதாகவும், யுத்தக் குற்றச் செயல்விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்த குற்றச்சாட்டுக்களை ஆளும் கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share it:

Post A Comment:

0 comments: