அதிக திருமணம் இடம்பெறும் நாடுகளில் இலங்கை - உலகின் சுபீட்சமான நாடுகளில் பின்னடைவு

Share it:
ad
உலகின் சுபீட்சமான நாடுகளின் வரிசையில் இலங்கை பின்னடைந்துள்ளது. உலகின் சுபீட்சமான நாடுகளின் வரிசையில் இலங்கை 62ம் இடத்தை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மக்களின் நலன்புரி மற்றும் சொத்துக்கள் அடிப்படையில் இந்த சுபீட்சம் தொடர்பான சுட்டி அளவீடு செய்யப்படுகின்றது. இந்த மதிப்பீட்டில் 142 நாடுகள் பங்கேற்றுள்ளன.

உலகின் சுபீட்சமான நாடாக நோர்வே, சுவிட்சர்லாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் முறையே முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இத்தை வகிக்கின்றன.

2013ம் ஆண்டில் சுபீட்சமான நாடுகளில் வரிசையில் இலங்கை 60ம் இத்தை வகித்த போதிலும் தற்போது 62ம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, உலகில் அதிகளவு திருமணம் இடம்பெறும் நாடுகளின் வரிசையில் இலங்கை முன்னணி வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உலகில் அதிகளவில் திருமணங்கள் இடம்பெறும் ஐந்து நாடுகளில் இலங்கையும் ஒன்று எனத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் 73 வீதமானவர்கள் திருமண பந்தத்தில் இணைந்து கொள்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Share it:

Post A Comment:

0 comments: