சம­கால அர­சியல் நிலை­மைகள்' தமிழ்த்­ தே­சியக் கூட்­ட­மைப்­பும், முஸ்லிம் காங்­கி­ர­ஸு ­ம் கலந்துரையாடியது

Share it:
ad

தமிழ்த்­ தே­சியக் கூட்­ட­மைப்­புக்கும் முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்­கு­மி­டையே ஆக்­க­பூர்­வ­மான பேச்­சுக்­களை எதிர்­கா­லத்­திலும் தொடர்­வ­தற்கு இணக்கம் காணப்­பட்­டுள்­ள­துடன்,கிழக்கு மாகாணத்தில் கிராம மட்­டத்­தி­லி­ருந்து பிரச்­சி­னை­களை ஆராய்ந்து தீர்­வு­ கா­ணவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்­புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்­கு­மி­டை­யி­லான சந்­திப்­பொன்று கொள்­ளுப்­பிட்­டியில் அமைந்­துள்ள அக்­கட்­சியின் தலைவர் ரவூப் ஹக்­கீமின் இல்­லத்தில் நேற்று மாலை இடம்­பெற்­றது.

சுமார் ஒரு மணி­நே­ரத்­திற்கும் அதி­க­மாக இடம்­பெற்ற இச்­சந்­திப்பில் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு சார்பில் கூட்­ட­மைப்பின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான இரா.சம்­பந்தன், தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை.சேனா­தி­ராஜாஇ பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான எம்.ஏ.சுமந்­திரன், பொன்.செல்­வ­ராஜா, விநோ­நோ­க­ரா­த­லிங்கம், ஈ.சர­வ­ண­பவன், கிழக்­கு­மா­கா­ண­சபை உறுப்­பினர் கோவிந்தன் கரு­ணா­கரம்(ஜனா) ஆகி­யோரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் சார்­பாக அக்­கட்­சியின் தலை­வரும் நீதி அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம், பொதுச்­செ­ய­லாளர் ஹசன் அலி, சட்­டத்­த­ரணி ஏ.எம்.பாயிஸ் ஆகி­யோரும் பங்­கேற்­றி­ருந்­தனர்.

இச்­சந்­திப்பு குறித்து தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன் கூறு­கையில்,

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பிற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸிற்கும் இடையில் கடந்த காலங்­களில் பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் கிர­ம­மான முறையில் பேச்­சுக்கள் இடம்­பெற்­றறு வந்­தன. அவ்­வா­றான நிலையில் அண்­மைக்­கா­லங்­க­ளாக அதனை தொட­ர­மு­டி­யாத நிலைமை காணப்­பட்­டது. இந்­நி­லையில் நாம் மீண்டும் மு.காவுடன் பேச்­சு­வார்த்­தை­களை ஆரம்­பித்­துள்ளோம்.

சம­கால அர­சியல் நிலை­மைகள், தமிழ் முஸ்லிம் உறவு உட்­பட பல்­வேறு விடங்கள் தொடர்­பாக கலந்­து­ரை­யா­டினோம். இந்தச் சந்­திப்பு மிகவும் ஆக்­க­பூர்­வ­மா­ன­தாக அமைந்­த­துடன் எதிர்­வரும் காலத்­திலும் இரு தரப்­பி­ன­ரி­டையே ஆக்­க­பூர்­வ­மான முறையில் சந்­திப்­புக்­களை நடைத்­து­வ­தற்கு இன்று(நேற்று) தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது. அதே­நேரம் நாம் தொடர்ந்தும் பேச்­சுக்­களை நடத்­த­வுள்­ளளோம். அது சிறு­பான்மை இனங்­க­ளாக இருக்கக் கூடிய தமிழ் முஸ்லிம் தரப்­பி­ன­ரி­டையே காணப்­படும் சிறு­சிறு ஐயப்­பா­டுகள் களை­யப்­பெற்று நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தும் என எதிர்­பார்க்­கின்றோம் என்றார்.

இதே­வேளை இச்­சந்­திப்பு குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் பொதுச் செய­லா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ஹசன் அலி கூறு­கையில்,

இன்­றைய(நேற்று) சந்­திப்பு மிகவும் பய­னுள்­ள­தாக அமைந்­தது. நாம் தொடர்ந்தும் கூட்­ட­மைப்­புடன் பேச்­சுக்­களை நடத்­து­வ­தற்கு தீர்­மா­னத்தை எடுத்­துள்ளோம். அத்­துடன் கிழக்கு மாகா­ணத்தில் தமிழ் முஸ்லிம் தரப்­புக்­க­ளி­டையே சிறு­சிறு பிரச்­சி­னைகள் காணப்­ப­டு­கின்­றன. முதலில் அவற்றைக் களைவதற்காக கிராம மட்டத்திலிருந்து அப்பிரச்சினைகள் தொடர்பில் மக்களின் கருத்துக்களை பெற்று ஆராயவுள்ளோம். இதற்காக விரைவில் கிழக்கு மாகாணத்திற்கான விஜயமொன்றையும் நாம் கூட்டாக மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளோம். பிரச்சினைகளை அடிப்படையிலிருந்து ஆராய்ந்து தமிழ் முஸ்லிம்களுக்கிடையிலான நல்லுறவை வலுவாக்குதற்கு திட்டமிட்டுள்ளோம் என்றார்.
Share it:

WadapulaNews

No Related Post Found

Post A Comment:

0 comments:

Also Read

Nation building in Sri Lanka - part 2

Today people are talking about national reconciliation, communal harmony, peace and development in Sri Lanka. I think as

WadapulaNews