மதுபோதை தலைக்கேறியதால், புகையிரதம் நிறுத்தப்பட்டது..!

Share it:
ad
மதுபோதை தலைக்கேறியதையடுத்து தண்டவாளத்தில் தலையை வைத்துப்படுத்து ரயில் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த மூவரை கடுகண்ணாவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கண்டி புகையிரத நிலையத்திலிருந்து நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் கொழும்பு நோக்கிச் சென்ற ரயிலில் மது போதையுடன் பயணித்த மூவரே இவ்வாறு ரயிலை மறித்துள்ளனர்.

கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிக் சென்ற ரயில் கடுகண்ணாவை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்ட போது இதில் மது போதையுடன் பயணித்த சிலரில் மூவர் கீழே இறங்கி ரயிலுக்கு முன்பாக தண்டவாளத்தில் படுத்துக் கொண்டனர்.

இச்சம்பவம் ரயில் புறப்படுவதற்கு தடையாக இருந்தது. ரயில்வே அதிகாரிகள் மற்றும் பலரும் இவர்களை அகற்ற முயன்ற போது அது பயனளிக்காத நிலையில் கடுகண்ணாவை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த பொலிஸார் அவர்களை கைது செய்தனர். Vi
Share it:

Post A Comment:

0 comments: