'அதிகார ஜனாதிபதி முறை ரத்து செய்யப்படாவிட்டால், அரசாங்கத்தை விட்டு விலகுவது உறுதி'

Share it:
ad
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்யப்படாவிட்டால் அரசாங்கத்தை விட்டு விலகுவது உறுதியானது என ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார். 

சிங்களப் பத்திரிகையொன்றுக்கு நேர்காணலில் இந்த விடயங்களை அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி முறைமையை ரத்து செய்து புதிய அரசியல் அமைப்பு ஒன்றை அறிமுகம் செய்யாவிட்டால், நிச்சயமாக அரசாங்கத்தை விட்டு விலகி பொது வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவளிக்கப்படும்.

ஜாதிக ஹெல உறுமய சில யோசனைகளை அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளது.

பதினைந்து நாட்களுக்குள் இது குறித்த நிலைப்பாட்டை வெளியிடுவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு அறிவித்துள்ளது.

இந்த யோசனைத் திட்டத்தினை நாடாளுமன்றில் சமர்ப்பித்து, விவாதம் நடத்தி நிறைவேற்றிக்கொள்ள முடியும் என நம்புகின்றோம்.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய தரப்பினர் எவ்வாறான நிலைப்பாட்டைக்கொண்டிருந்தாலும், ஜாதிக ஹெல உறுமய கட்சி நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்து, அரசியலமைப்பில் திருத்தம் செய்தால் மட்டுமே ஆளும் கட்சிக்கு எதிர்காலத்தில் ஆதரவளிக்கும்.

இந்த நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் கிடையாது என அதுரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார்.


Share it:

Post A Comment:

0 comments: