சவூதி அரேபியாவின் ஜித்தா விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்கவிற்கு வருகை தந்த விமானமொன்றில் இருந்த வெளிநாட்டவர் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேஷிய பிரஜை ஒருவரே விமானத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
குறித்த விமானம் 12-10-2014 இன்று முற்பகல் 10.20க்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த வெளிநாட்டுப் பிரஜையின் சடலம் இன்று பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Post A Comment:
0 comments: