நாட்டுக்குள் விடுதலைப் புலிகள் தொடாச்சியாக இயங்கி வருகின்றனர் - ஞானசாரர்

Share it:
ad
ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்ப்பிற்கு பொதுபல சேனா இயக்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதாக ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் அறிவித்துள்ளது.

நட்டில் இயங்கி வரும் பிரிவினைவாத சக்திகளை இல்லாதொழிக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்படும் அமைப்புக்களுக்கு எதிராக அரசாங்கம் முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டை பிளவுபடுத்தும் நோக்கில் இயங்கி வரும் தரப்பினர் தொடர்ந்தும் நாட்டில் இயங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றின் தீர்மானமானது நாட்டில் மீளவும் பிரச்சினைகளை ஏற்படுத்த வழியமைக்கும் என அவர் குறிப்பிட்டுளு;ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் மூன்று பிரிவுகளாக செயற்பட்டு வந்ததாகத் தெரிவித்துள்ளார்.

இராணுவம், அரசியல் மற்றும் சர்வதேசம் ஆகிய மூன்று பிரிவுகளாக இயங்கி வந்தாகவும், படையினால இராணுவப் பிரிவை மட்டுமே இல்லாதொழித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

நாட்டுக்குள்ளும் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடாச்சியாக இயங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
Share it:

Post A Comment:

0 comments: