ஹஜ் யாத்திரிகர்களுடன் வந்த இந்தோனேஷிய விமானம், கட்டுநாயக்காவில் அவசர தரையிறக்கம்

Share it:
ad
கருடா இந்தோனேஷிய நிறுவனத்துக்கு சொந்தமான விமானம், 375 பயணிகளுடன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கட்டாயமாக தரையிறக்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று இரவு இன்த சம்பவம் இடம்பெற்றதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த விமானத்தில் சவூதி அரேபியாவிலிருந்து வந்த ஹஜ் யாத்திரிகர்களும் பயணித்துள்ளனர்.

விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக குறித்த விமானம் கட்டாயமாக தரையிறக்கப்பட்டுள்ளதுடன் விமானத்தை சரி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஹஜ் பயணிகளை அழைத்து செல்வதற்காக மற்றுமொரு விமானத்தை கருடா விமான சேவை நிறுவனம் இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளதாக கூறியதாக, இந்தோனேஷிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Share it:

Post A Comment:

0 comments: