தேர்தலை இலக்காக கொண்டு வரவு செலவுத் திட்டத்தை வெளியிட்டு பொதுமக்களை ஏமாற்றுவதற்கு தாம் தயாராக இல்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்தமுறை வரவு செலவு திட்டம் இலங்கை பிரஜைகளுக்கு அனுகூலத்தை வழங்கக் கூடிய ஒன்றாகவே அமையும் என அவர் குறிப்பிட்டார்.
மக்கள் வாழ்க்கையை மேம்படுத்தக் கூடிய வகையிலும், நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் பல யோசனைகளை அதில் உள்ளடக்கியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இன்று 19-10-2014 முற்பகல் அலரிமாளிகையில் இடம்பெற்ற சந்திப்பில் மேலும் உரையாற்றிய ஜனாதிபதி. கடந்த 10 வருடங்களாக அரசாங்கம் முறையான பொருளாதார முகாமைத்துவத்துடன் செயற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதன்காரணமாக, தொழில் புரியும் வர்க்கத்தினருக்கு பல நிவாரணங்களை வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.


.jpg)
Post A Comment:
0 comments: