இலங்கை முஸ்லிம்கள் மாட்டுக்கு பதிலாக, ஆட்டை உழ்ஹிய்யா கொடுத்தால் என்ன..?

Share it:
ad
(நுஸ்ரத் நவ்பல்)

ஹஜ்ஜுப் பெருநாளோடு தொடர்புபடும் ஒரு அமலே உழ்ஹிய்யாவாகும் அத்ற்;காக ஆடு மாடு ஒட்டகை என்பன பயன்படுத்தப்படுகின்றன. ஒட்டகைகள் அதிகமாக உள்ள நாடுகளிள் அது உழ்ஹிய்யா வாக அறுக்கப்படுகிறது. ஏனைய நாடுகளில் அங்கு கிடைக்கும் ஆடு மாடு என்பன அறுக்கப்படுகின்றன. ஒரு குடும்பத்துக்காக குடும்பத்தலைவன் ஒரு ஆட்டையும் ஏழு பேர் சேர்ந்து ஒரு மாட்டையும் பத்துப் பேர் சேர்ந்து ஒரு ஓட்டகையையும் உழ்ஹிய்யாவாக நிறைவேற்ற சரீஅத் அனுமதித்துள்ளது. இது சகலரும் அறிந்துவைத்துள்ள ஒன்றாகும்.

நம் நாட்டிலும் அறுவைக்கான சட்டதிட்டங்கள் இருந்;த போதிலும் மாடறுப்பதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதுண்டு அதனை கவனத்திற் கொன்டு சில கருத்துக்களை முன்வைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும் சழூகம் விளிக்கவேன்டும். நிம்மதியோடு வாழ வேன்டும்.

இறைச்சி வியாபாரம் தான் எமது தொழிலா?

இறைச்சிக் கடைகளால் பெறப்படும் குத்தகைப் பணம் மூலம் தான் அநேக நகர, உப நகர சபைகள் இயங்குகின்றன இந்தக்கடைகளை நாடாத்துபவர்கள் அதிகமானோர் முஸ்லீம்களாவர் முன்னொரு காலத்தில் இதனை இந்தியா காத்தான்குளம், கேம்பலாபாத், பாலக்குடி, இராமனாதபுரம் போன்ற இடங்களிலிருந்து வந்த வியாபாரிகள் செயது வந்தனர். தற்போதும் அனேகமாக அந்த சந்ததியினரே செய்து வருகின்றனர்.

சமீப காலமாக மாட்டிறைச்சிக் கடைகள் நடாத்துவதற்கு எதிராக சிலர் கிளம்பியுள்ளனர். சிலர் குத்தகையை தடுப்பதும் இறைச்சிக் கடைகளை திறக்கவிடாது தடுப்பதுமாக பல பிரச்சினைகளை உண்டுபண்னுகின்றனர் இலங்கையில் தினமும் 5000 மாடுகள் அறுக்கப்படுகினறன. நாட்டிள் சனத்தொகை விகிதாசாரப்படி முஸ்லீம்கள் எந்தளவு ஆகாரமாக கொள்கிறரர்கள் மீதி எங்கே செல்கிறது என்பதை அறிந்துகொள்ள முடியும் மாட்டிறைச்சிக் கடை நடாத்துவோர் அப்பிராணிகளை கொண்டுவர செலவிட வேன்டியுள்ளது. இதனிடையே முஸ்லீம்களுக்கு இறைச்சிக் கடையை விட்டால் வேறு தொழிலே இல்லையென்று முஸ்லிம்களுக்கு எதிராக என்னவெல்லாம் செய்யலாமோ அதை செய்கின்றனர்.

இதற்கு மாற்றுவழியென்ன ?  

மாட்டிறைச்சிக்கிப் பதிலாக ஆட்டிறைச்சியை விற்கும் கடைகளைத் திறக்கலாம் அல்லது தனியே அறுத்து வினியோகம் சையலாம் அதுவும் இன்றேல் மற்றுமொரு தொழில் பற்றி சிந்திக்கலாம் இவ்வாறு செல்வதன் மூலம் மேற்கண்ட பிரச்சினைகள் ஏற்படாது எம்மைக் காத்துக் கொள்ள முடியும்.

உழ்ஹிய்யாவும் நாமும்

துல்ஹஜ்ஜு மாதத்தில் செய்யப்படும் ஒரு சிறப்பான அமல் உழ்;ஹிய்யாவாகும் என்பது அடிக்கடி காதிலே விழுவதனால் அதனை நிறை வேற்றுவதில் எல்லோரும் போட்டி போடுகின்றனர். இதனை ஒழுங்குற செய்ய வேன்டும்  என்ற நோக்கில் பள்ளிவாசல் சம்மேளனங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன மாடுகள் உழ்ஹிய்யாவுக்குரிய பிராணி என்ற நினைப்பில் முயற்சியெடுக்கினறனர். அந்த மாடுகள் கொண்டுவரப்படும் போதும்  அறுக்கும் போதும்  பிடிப்பதற்கு காவல்துறை பாரத்துக் கொண்டிருக்கின்றனர்;. மிருக காருண்;யம் செய்வதாகக் கூறும் மஞ்சள் காவியணிந்த சிலர் அறுப்பதற்கு தயார் நிலையில் இறுப்பவற்றை அவிழ்து விடுதலை செய்வதும் அறுக்க விடாது தடுப்பதுமான செயல்கள் நடைபெறுகின்றன. எவ்வள்வு கொடுத்தாலும் மாடு வாங்க வேண்டும் என்று நினைப்பவன் ஒருமுறையேனும் மாடு கொடுக்காமல் ஆடு கொடுத்துப் பார்த்தால் புரிந்து கொள்ளமுடியும் 

நபி இப்ராஹீமின் உழ்ஹிய்யா ! 

தனது குழந்தை இஸ்மாயீலை அல்லாஹுக்காக அறுக்க முயன்ற போது ஒரு ஆட்டையே அல்லாஹ் இறக்கயருளினான்  இன்று அது உழ்ஹிய்யா என்ற சன்மார்க கடமையாக ஆகி விட்டது நபி (ஸல்) அவர்கள் கூட இரண்டு ஆடுகளை தனக்காகவும் தன் குடும்பத்தவருக்காகவும் நிறை வேற்றினார்கள் என்று பார்க்கின்றோம்.

எனவே ஆளுக்கொரு மாடு அறுக்க வேன்டும் என்பதல்ல மாறாக ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு ஆடு அறுத்தல் போதுமானதாகும். முஸ்லீம்களுக்கு மாட்டை விட்டால் ஒன்றுமில்லை என்று கருதுமளவுக்கு மாத்திரமன்றி அதன் காரணமாகவே  பல் வகை வெறுப்புணர்வுகளும் வெளிப்படுவதைப் பாக்கின்றோம். அதை தவிர்ந்துகொள்ளும்; மாற்றீடாகவே ஆட்டைப் பயன்படுத்துவது விவேகமாகும் ஆடு வளரப்பது நல்லதொரு செயலாகும்.  நபிமார்; செய்த இத்தொழில் பரக்கத் நிறைந்ததாகும் வளரச்சியடையும் இதனை பண்ணைகளில் கூட வளரத்;தெடுக்கலாம் உழ்ஹிய்யா கொடுப்பவர்களுக்கு உதவியாகவும் அமையும் மாடறுப்போரின் வெறுப்பைத் தணிக்க உதவும்.

இந்த மாற்றீடே மாபெரிய மருந்தாக அமையும் எதிர் வரும் காலங்களில் திட்டமிட்டு ஆட்டை உள்ஹிய்யாவாக நிறைவேற்ற நாம் முயற்சிஎடுக்க வேணடும் இன்தியா,சோமாலியா,சூடான் போன்ற நாடுகளிலிருந்தேனும் இறக்குமதி செய்வதன் ழூலம் நமது சன்மார்க்க கடமையை நிம்மதியோடு நிறைவேற்றிவிட முடியும்.

சிந்திப்போர் முடிவெடுப்பர் 

மாடுவளப்போர் அதிகம்பேர் பெரும்பான்மை இனத்தவராவார் நாட்டுப் புறங்களில் வாழும் அவர்களது வருமான வழிகளிலொன்று மாடு வளர்த்தலுமாகும். அதனை வளரத்;து பெண் மாட்டிலிருந்து பால் எடுத்து விற்று அன்றாட வாழ்க்கையைக் கழிப்பதோடு ஆண்மாட்டை வளர்த்தெடுத்து இறைச்சிக்காக விற்று பணம் தேடுகின்றனர் அப்பனணத்தை தனது ஜீவனோபாயத்துககு மாத்திரமன்றி பிள்ளைகளின் கல்வி, மேற்படிப்பு என்பவற்றுக்கு செலவிடுகின்றனர். அந்த மாடுகள்  விற்பனை செய்யப்படாவிட்டால் கஷ்டப்படப்போவது அந்த ஏழை மக்களேயாகும்.

தினமும் 5000 மாடுகள் அறுக்கப்படுகின்றன. ஒரு வருடத்துக்கு அனுமதிப்பத்திரம் பெற்று அறுக்கப்கடும் தொகை 1,750,000 ஆகும் சரியான முறையில் சிந்திப்போர் இவை அறுக்கப்படா விட்டால் என்ன ஏற்படும் அறுக்கப்படும் மாடுகளிள் இறைச்சியே 8 வீதம் கொண்ட முஸ்லீம்கள் உண்டால் மற்றதை அனுபவிப்போர் யார் என்பதையெல்லாம் புரிந்து கொளளமுடியும்.

முஸ்லீம்கள் இறைச்சி சாப்பிடுபவர்கள் என்று பொதுவாகக் கூறப்பட்டபோதிலும் உண்மை அதுவல்ல முஸ்லீம்கள் ஒரு சாராரே இறைச்சி சாப்பிடுகின்றனர் மீன், கருவாடு என்பவற்றை விரும்பி உண்ணும்; முஸ்லீம்கள் அனேகர்  உள்ளனர். எனவே முஸ்லீம்கள் மீது கூறப்படும் குற்றச்சாட்டு பொய்யானதாகும் என்பதை விளங்க முடியும்.

மேற்கூறியவை எல்லாம் என் உள்ளத்திலே கிளம்பியவையாகும் உழ்ஹிய்யா விடயமாக நாம் நன்கு சிந்திக்க வேன்டும் ஆட்டை உழ்ஹிய்யாவாகக் கொடுப்பதை திட்டமிட்டு செய்யலாம் ஆளுக்கொரு மாடென்ரு அல்லாமல் குடும்பத்துக்கொரு ஆடு என்று நிறை வேற்றலாம சட்டப்பிரச்சினையோ துவேச உணர்வோ மேலிடாது பாரத்துக்கொள்ளமுடியும் சிந்தியுங்கள் நல்ல முடிவை அடைவீர்கள்.

Share it:

Post A Comment:

0 comments: