முன்னேற்றம் காணாத இலங்கை - ஐ.நா மனித உரிமைகள் குழு

Share it:
ad
இலங்கையில் பல விடயங்களில் இன்னனும் முன்னேற்றம் ஏற்படவில்லை என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.

இலங்கை தொடர்பான ஐந்தாவது மீளாய்வு அறிக்கை இன்று வெளியிடப்பட்டபோதே இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் இலங்கையால் கடந்த 7ஆம் 8 ஆம் திகதிகளில் சமர்ப்பிக்கப்பட்ட மீளாய்வு அறிக்கையின் மீதே இன்று ஐக்கிய நாடுகள் குழுவின் கண்காணிப்பு வெளியிடப்பட்டது.

இலங்கையின் 18வது அரசியல் அமைப்பு சரத்தின் மூலம் நீதித்துறையின் சுதந்திரம் பாதிக்கப்பட்டு நீதித்துறையின் நியமனங்கள் யாவும் ஜனாதிபதியின் வசம் சென்றுள்ளன.

2013 ஆம் ஆண்டில் முன்னாள் பிரதம நீதியரசர் மீது கொண்டு வரப்பட்ட குற்றவியல் பிரேரணையை நோக்கும் போது இலங்கையின் நீதித்துறை சுதந்திரம் தொடர்பில் சந்தேகம் எழுகிறது.

இலங்கையின் பயங்கரவாத தடைச் சட்டம், கருத்து சுதந்திரமின்மை, கைதுகள், சிறையடைப்பு, சித்திரவதைகள் என்பன தொடர்பில் குழு தமது கவலையை வெளியிட்டுள்ளது.

இந்தநிலையில் இலங்கை குறிப்பிட்ட விடயங்களில் தமது முன்னேற்றத்தை கொண்டு வரவேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

Share it:

Post A Comment:

0 comments: