வரலாற்றில் முதற்தடவையாக இன்று காலை (12) ஒரே தடவையில் 20000 பேருக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் போது விடுதலைப் புலிகளின் வங்கிகளில் அடமானம் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
'பிரச்சினைகளற்ற நிலத்தின் உரித்துரிமை அபிவிருத்திக்கான அடித்தளமாகும்' என்ற தொனிப்பொருளில் இக்காணி உறுதிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா- ரிஷாத் பதியுதீன்- சந்திரசிறி கஜதீர- வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி- பிரதி அமைச்சர் சிரிபால கம்லத்- பாராளுமன்ற உறுப்பினர்களான ஹுனைஸ் பாருக்- முருகேசன் சந்திரகுமார்- ஏ.எச்.எம் அஸ்வர்- ஆகியோர் கலந்துகொண்டனர்.





Post A Comment:
0 comments: