இது முஸ்லிம் காங்கிரஸின் கவனத்திற்கு..!

Share it:
ad
அரசாங்கத்தை விட்டு வெளியேறப் போவதாக ஜாதிக ஹெல உறுமய கட்சி மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கட்சியினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு உரிய பதிலளிக்க அரசாங்கம் தவறினால் ஆளும் கட்சியில் தொடர்ந்தும் நீடிப்பதில் அர்த்தமில்லை என மேல் மாகாண அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற அரசியல் கருத்தரங்கு ஒன்றில் அவர் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கம் சுயமரியாதையுடன் அரசியலில் ஈடுபடத் தவறினால் தொடர்ந்தும் ஆளும் கட்சியில் அங்கம் வகிப்பதில் பயனில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை பிழையானது என்பதே எல்லோரினதும் கருத்தாகவும் எனினும், இதனை யார் சொல்வது யார் இதனை பகிரங்கப்படுத்துவது என்பதில் தயக்கம் காணப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

ஜாதிக ஹெல உறுமய அரசாங்கத்தின் கூட்டணி கட்சி என்ற போதிலும் பிழைகளை சுட்டிக்காட்ட தைரியமாக முன்வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரம் இருக்கும் போது பிழைகள் தெரிவதில்லை பிழைகள் தெரியும் போது அதிகாரம் இருப்பதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை ஜனாதிபதி சொந்த தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள மட்டுமே பயன்படுத்திக் கொண்டதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
Share it:

Post A Comment:

0 comments: